மனிதநேயம் மரித்த தருணம்..! இடம் தராத சக பயணிகள் - கையில் கட்டோடு படிக்கட்டில் பயணம் செய்த மூதாட்டி

Update: 2022-08-30 15:04 GMT

செங்கல்பட்டு வண்ணாரத்தெருவை சேர்ந்தவர் கமலம்மாள். இவர் தனது வீட்டிலிருந்து வெளியே வந்தபோது கால்இடறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவரது இடது கை முறிவு ஏற்பட்டதால் கட்டு போட்டு மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பி உள்ளனர். தொடர்ந்து அரசு மருத்துவமனை எதிரே உள்ள பேருந்து நிலையத்திற்கு வந்த மூதாட்டி மணப்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற பேருந்தில் ஏறி முதல் படிக்கட்டிலேயே அமர்ந்து சுமார் 2-கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டது சக பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்