ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் விமானப்படையின் மிக்-21 ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்துள்ளனர்.உதர்லாய் விமான தளத்தில் இருந்து, நேற்று இரவு 9 மணியளவில் இந்திய விமானப்படையின் மிக்-21 போர் விமானம் பயிற்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது, பார்மர் மாவட்டம் பிம்டா பகுதியில் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 2 விமானிகளும் உயிரிழந்தனர். இந்த, விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை விசாரணை நடத்தி வருகிறது. இதனையடுத்து, விமானிகள் உயிரிழப்புக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.