தாயை தொலைத்த சோகம் மறந்து கொஞ்சி விளையாடிய குட்டி யானை... பூரித்துப்போன ஆஸ்கர் தம்பதி
தர்மபுரியில் இருந்து மீட்கப்பட்ட 4 மாத குட்டியானையை தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆஸ்கர் தம்பதி பொம்மன் பெள்ளி பராமரிக்கும் வீடியோவை வனத்துறை முதன்மை செயலர் வெளிட்டுள்ளார். 40 அடி ஆழ கிணற்றில் விழுந்து பத்திரமாக மீட்கப்பட்ட குட்டி யானையை அதன் தாயுடன் இணைக்கும் முயற்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்ட அந்த குட்டி யானையை "தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன், பெள்ளி தம்பதி பராமரிக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அந்த குட்டி யானை பொம்மன், பெள்ளியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வனத்துறை செயலர் சுப்ரியா சாகு டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.