'தி கேரளா ஸ்டோரி' - உச்ச நீதிமன்றம் ஒப்புதல் | The Kerala Story

Update: 2023-05-10 14:32 GMT

"தி கேரளா ஸ்டோரி" படத்திற்கு மேற்கு வங்க அரசு விதித்த தடைக்கு எதிராக அப்படத்தின் தயாரிப்பாளர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை மே 12-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும், வன்முறை சம்பவங்களை தடுக்கவும் தடை விதிப்பதாக மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்தார். திரைப்படத்துக்கு மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்டுள்ள தடையாலும், தமிழ்நாட்டில் நிலவும் மறைமுக தடையாலும் நாள்தோறும் வருவாய் இழப்பு ஏற்படுவதால், அவசரமாக விசாரிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. முறையீட்டை ஏற்ற உச்சநீதிமன்றம் ரிட் மனு மே 12ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தது.

Tags:    

மேலும் செய்திகள்