சினிமா பைனான்சியரை கடத்தி 34 சவரன் தங்க நகை பறித்த சம்பவம்.. கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது

Update: 2023-05-03 07:25 GMT

மதுரையில், பைனான்சியர் ஒருவரை கடத்தி, 34 சவரன் தங்க நகைகளை பறித்த சம்பவத்தில், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், சினிமா துறையில் பைனான்சியராக உள்ளார். இவர் கடந்த மாதம் 26-ம்தேதி, பாண்டி கோவில் அருகே, காரில் வந்த மர்ம கும்பல், அவரை கடத்திச் சென்று, 34 தங்க சவரன் நகைகளை பறித்துச் சென்றது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது, இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலப்பனங்காடியைச் சேர்ந்த குண்டு சரவணன் என்பவர், பிரேம் குமாரிடம் இருந்து பறித்த நகைகளை மதுரையில் விற்கச் சென்றபோது பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், கூட்டாளிகள் தனசேகரன், தனபால், மணி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், கைதான சரவணனிடம் இருந்து 34 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்