கோர்ட்டில் ஆசிட் வீசிய கணவன்..! மனைவி பரிதாப பலி... கோவையில் அதிர்ச்சி...

Update: 2023-04-29 17:10 GMT

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் குடும்ப பிரச்சனை காரணமாக, மனைவி கவிதா மீது கணவர் சிவா ஆசிட் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கணவர் சிவா கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 80 சதவீதம் காயம் அடைந்த கவிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு கவிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்