கனமழை காரணமாக கிழக்கு மற்றும் தென்மேற்கு சீனாவில் உள்ள அன்ஹுய் மற்றும் சோங்கிங் மலைப்பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் கரையோரம் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. நிலச்சரிவுகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது... இதையடுத்து வெள்ள நிவாரணப் பணிகளும், மீட்புப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.