தமிழகத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்திய 'போலி வீடியோக்கள்' - சிக்கிய பிரபல யூடியூபர் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. இதனால் வடமாநில தொழிலாளர்கள் அச்சமடைந்து, சொந்த ஊர்களுக்கு திரும்பிய நிலையில், வீடியோக்கள் தொடர்பாக விசாரித்த போது அவை போலியானவை என்பது தெரியவந்தது. இந்த வீடியோக்கள் பீகாரில் எடுக்கப்பட்டவை என்பதும் அம்மாநில போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. போலி வீடியோக்களை பரப்பியதாக பீகார் மாநிலத்தில் பிரபல யூடியூபரான மணீஷ் காஷ்யப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரது வங்கி கணக்கிலிருந்த 42 லட்சம் ரூபாய் முடக்கப்பட்டது. மணீஷ் காஷ்யப்பை பீகார் போலீஸ் தேடிவந்த நிலையில், அவர் ஜகதீஷ்பூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதனைத் தொடர்ந்து மணீஷ் காஷ்யப்பை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.