கோயிலில் திடீரென மிரண்டு ஓடிய யானை.. தொப்பென கீழே விழுந்த இளைஞர்..சிதறிய மக்கள் - பரபரப்பு காட்சி

Update: 2023-03-09 09:49 GMT

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே, கோயில் திருவிழாவில் யானை மிரண்டு ஓடியதால், பரபரப்பு ஏற்பட்டது. வர்க்கலா அயிரூர் தர்ம சாஸ்தா கோயில் திருவிழாவை ஒட்டி, சாமி ஊர்வலத்துக்காக யானை வரவழைக்கப்பட்டது. மேள, தாளம் முழங்க சாமி ஊர்வலம் வந்த போது, யானை மிரண்டு ஓடியது. இதனால், யானை மீது அமர்ந்திருந்த இளைஞர், நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். கோயில் வளாகத்தில் மிரண்டு ஓடிய யானையை, அரை மணி நேரம் போராடி பாகன் கட்டுக்குள் கொண்டு வந்தார். இதன் காரணமாக, திருவிழாவில் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்