மது போதையில் அரசு பேருந்தை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர் - கொந்தளித்த பயணிகள்
கள்ளக்குறிச்சி அருகே அரசு பேருந்து ஓட்டுநர் குடி போதையில் இருந்ததால், பேருந்தில் பயணித்த பணிகள் அதிர்ச்சி அடைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராய பாளையத்தில் இருந்து சின்னசேலத்திற்கு சென்ற அரசு பேருந்தை, ஓட்டுநர் குடிபோதையில் இயக்கியதாக தெரிகிறது. பேருந்து தாறுமாறாக ஓடியதால் அதிர்ச்சி அடைந்த பயணிகள், பேருந்தை பாதியில் நிறுத்தி ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மாற்று ஓட்டுநர் மூலம் பேருந்தை இயக்கினர். மேலும், போக்குவரத்து துறை அதிகாரிகள் மாற்றி மாற்றி பேசியதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.