குத்தாட்டத்தால் கல்யாணத்தில் வெடித்த மோதல்... மேடையில் திடீரென மயங்கிய மணப்பெண் - தோளில் தூக்கி கொண்டு ஓடிய பாகுபலி மாப்பிள்ளை

Update: 2023-06-08 11:05 GMT

குத்தாட்டத்தால் கல்யாணத்தில் வெடித்த மோதல்... மேடையில் திடீரென மயங்கிய மணப்பெண் - தோளில் தூக்கி கொண்டு ஓடிய பாகுபலி மாப்பிள்ளை

மறவன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மணமகனுக்கும், ராஜாக்கமங்கலம் துறை பகுதியை சேர்ந்த மணமகளுக்கும் திருமணம் இனிதே நடந்தேறியது. ஆனால் பிரச்சினை விருந்து உபசரணையில் தான் துவங்கியது. இரவு விருந்தின் போது மணமகள் வீட்டாரின் நண்பர்கள், உறவினர்கள் சிலர் போதையில் குதூகலமாக குத்தாட்டம் ஆடிக் கொண்டே, மணமகனின் உறவினர் பெண்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன் தரப்பினர், குத்தாட்டம் போட்ட இளைஞர்கள் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்த முயல, இருதரப்பினர் இடையே தகராறு வெடித்தது. இவர்கள் அடித்துக் கொள்வது போதாதென்று திருமண மண்டப ஜன்னல் கண்ணாடிகள், பிளாஸ்டிக் சேர்களை அடித்து உடைத்து பந்தாடியுள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து விசாரித்த நிலையில், இந்த களேபரத்தால் மணமகள் திடீரென மயங்கி விழுந்தார். "நல்ல வேளை திருமணம் முடிந்த பின்பு சண்டை வந்தது... திருமணத்திற்கு முன்பே இவர்கள் அடித்துக் கொண்டால் நம் கதி அதோகதி தான்" என நினைத்துக் கொண்ட மணமகன், பாகுபலியைப் போல மயக்கமுற்ற மணமகளைத் தன் தோளில் சுமந்தபடி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றது தான் சுவாரஸ்யம்...

Tags:    

மேலும் செய்திகள்