குடும்பத்தை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துனர் - அரசு பேருந்தில் பரபரப்பு | Thiruppur
திருப்பூரில் பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளியுடன் ஏற்பட்ட தகராறில் அவரது மகனை தாக்கியதாக அரசு பேருந்து நடத்துனர் மீது போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ். 80 சதவீத பார்வை குறைபாடு உடையவரான இவருக்கு வழங்கப்பட்டுள்ள இலவச பேருந்து பயண அட்டை மூலம், அவருக்கு துணையாக ஒருவர் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற நிலையில், சத்யராஜ் தனது மனைவி மற்றும் மகனுடம் மகளிருக்கான இலவச பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது அவர், தனக்கு துணையாக தனது மகன் வருவதாக கூறி, அவருக்கு டிக்கெட் எடுக்க மறுத்துள்ளார். ஆனால் பேருந்து நடத்துனரோ, மனைவி உடன் வருவதால் மகனுக்கு டிக்கெட் எடுக்க வேண்டுமென கூறியுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்படவே, நடத்துனர் முத்துக்குமார், சத்யராஜையும், அவரது குடும்பத்தையும் பேருந்தில் இருந்து இறக்கிவிட்டுள்ளார். மேலும் சத்யராஜின் மகன் சிபிராஜை முத்துக்குமார் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து நடத்துனர் முத்துக்குமார் மீது சத்யராஜ் போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.