உருவ உருவ வந்து கொண்டே இருந்த துணி..பெண்ணின் ஐடியாவால் அதிர்ந்த ஏர்போர்ட்.."ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டனவே"

Update: 2023-05-21 07:58 GMT

விமானத்தில் உடைமைகளுக்கான கட்டணத்தைத் தவிர்க்க சுமார் 6 கிலோ எடையுள்ள ஆடைகளை அணிந்த பெண்ணிற்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்துள்ளது. Melbourneல் இருந்து Adelaide நகருக்கு சென்ற 19 வயது இளம்பெண், உடைமைகளுக்கான கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக 6 கிலோ அளவில் ஆடைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அணிந்துள்ளார். அப்படி இருந்தும் அவரின் உடைமைகள் வரம்பை விட 1 கிலோ கூடுதல் எடையுடன் இருந்துள்ளது. இதையடுத்து Jetstar விமான நிர்வாகம் அப்பெண்ணுக்கு சுமார் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. அந்த இளம்பெண், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டியதோடு மட்டுமல்லாமல், 6 கிலோ எடையுள்ள உடைகளையும் அணிந்தபடி அசவுகரியமாக விமானத்தில் பயணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்