தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், நிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் எடப்பாடி தொகுதிக்கு உள்பட்ட வீரக்கல், பெரிய சோரகை கிராமங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு, வாக்களித்த மக்களை மறந்து விட்டார் என்று குற்றம் சாட்டினார். முந்தைய அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் நிறுத்தி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.