மாநகராட்சி ஊழியர்களின் துரித நடவடிக்கையால், வடசென்னை பகுதியில் தேங்கி இருந்த மழைநீர், உடனுக்குடன் வெளியேற்றப்பட்டது.
சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக மாநகரத்தில் ஒரு சில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் துரித நடவடிக்கையால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி உள்ள மழைநீர் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை புளியந்தோப்பு பகுதியில் இருந்து வியாசர்பாடி வழியாக பெரம்பூர் செல்லும் சாலை, வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை, பேசின் பிரிட்ஜ் ரயில் நிலைய எதிரே உள்ள சாலை, பட்டாளம் புளியந்தோப்பு சாலை ஆகியவற்றில் காலை மழைபெய்யும் போது முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி இருந்தது. இவற்றை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றினர்.