பேருந்து ஓட்டுநருக்கு திடீர் நெஞ்சு வலி...துரிதமாக செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றிய டிரைவர்

Update: 2022-08-30 15:39 GMT

ஓடும் பேருந்தில் திடீரென்று நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை திருவொற்றியூரில் இருந்து திருவான்மியூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தை 41 வயதான ஓட்டுநர் ரவி இயக்கினார்.

அன்னை வேளாங்கண்ணி ஆலயம் திருப்பத்தில் அடையாறு நோக்கி திரும்பும் போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட ரவி, கடும் வலிக்கு மத்தியிலும் பேருந்தை சாலையிலேயே நிறுத்தினார். இதைக் கண்டு பதறிய பயணிகளும் நடத்துநரும் ரவியை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்