பள்ளி மாணவிக்கு 'லவ் டார்ச்சர்' தட்டிக்கேட்ட அக்கா கணவருக்கு நடந்த கொடூரம் | Love torture

Update: 2022-12-24 07:39 GMT

ஓமலூர் அருகே, பள்ளி மாணவியை காதலிக்க சொல்லி தொல்லை கொடுத்த நபரை, தட்டிக்கேட்ட மாணவியின் உறவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் சின்ன நடுப்பட்டி பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவிக்கு, சிக்கனம்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர் காதலிக்க சொல்லி தினமும் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனிடையே, இதை அறிந்த மாணவியின் அக்கா கணவர் தட்டிக் கேட்ட நிலையில், அந்த இளைஞர் தனது நண்பர்களுடன் இணைந்து, அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த மாணவியின் உறவினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள 3 இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்