வீடு புகுந்து பட்டியலின பெண்ணை உயிருடன் எரித்து கொன்ற கொடூரம்... விசாரணை வெளியான அதிர்ச்சி பிண்ணனி

Update: 2022-11-10 16:04 GMT

காயா மாவட்டம் பஞ்மா கிராமத்தில் வசித்து வந்த பரமேஸ்வர் புயான் என்பவர் நீண்ட நாள் நோய் காரணமாக உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கு, அதே பகுதியில் வசித்து வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் தான் காரணம் என பரமேஸ்வரின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, அந்த பெண்ணின் வீட்டை முற்றுகையிட்ட அவர்கள், உள்ளே பதுங்கி இருந்த பெண்ணை பலமாக தாக்கியதுடன், அவர் மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் எரித்தனர்.

இது குறித்துபாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார், 9 பெண்கள் உட்பட 14 பேரை கைது செய்தனர்.

சம்பவத்தில் 68 பேருக்கு தொடர்புடையதாக கூறிய போலீசார், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பாதுகாப்பு அளித்திப்பதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்