பெண்ணை சிறை வைத்த வங்கி ஊழியர்கள்... வெகுண்டெழுந்து பேங்கை முற்றுகையிட்ட பொதுமக்கள் குமரியில் பரபரப்பு

Update: 2022-12-15 12:50 GMT

கன்னியாகுமரி அருகே தனியார் வங்கியில் கடன் பெற்ற பெண்ணை, வங்கி ஊழியர்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்மயிலின் மஞ்சினி. இவர் வங்கியில் இருந்து 28 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் சரிவர தவணைத் தொகையை கட்ட மறுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஸ்மயிலின் மஞ்சினியை வங்கி ஊழியர்கள் சிறை பிடித்தனர். இதுக்குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொதுமக்கள், வங்கி வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். குலசேகரம் காவல் நிலைய போலீசார் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்