பாதியிலேயே இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ்.. உடலை கண்ணீருடன் தூக்கி சென்ற உறவினர்கள்
ஜவ்வாது மலை பகுதிக்குட்பட்ட சீங்காடு கிராமத்தைச் சேர்ந்த சுலோச்சனா என்பவர், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் உயிரிழந்தார். சுலோச்சானாவின் உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட நிலையில், சாலை வசதி இல்லாததால், பாதி வழியிலேயே இறக்கி விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், டோலி கட்டி இறந்தவரின் உடலை இரண்டு கிலோ மீட்டர் தூரம் உறவினர்கள் சுமந்து சென்றனர். இதனிடையே, சாலை வசதி கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.