15 நிமிடத்தில் 36 செய்திகள் | தந்தி காலை செய்திகள் | Speed News | (02.04.2023)

Update: 2023-04-02 03:59 GMT
  • கோயில் நுழைவு போராட்டங்களை நடத்துவதற்கான தூண்டுகோலாக அமைந்தது, வைக்கம் போராட்டம் தான் என்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார். சட்டப்பேரவை நடக்கும் நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கு வந்து விழாவில் பங்கேற்றது, வைக்கம் போராட்டத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை உணர்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
  • வைக்கத்தில் இருந்து கொச்சி திரும்பும் வழியில், வைக்கம் - எர்ணாகுளம் நெடுஞ்சாலையில் உள்ள உணவகம் ஒன்றில், மக்களோடு மக்களாக அமர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் சிற்றுண்டி அருந்தி, அங்குள்ள பொதுமக்களுடன் உரையாடினார்.
  • வரும் 7-ம் தேதி மாலை 4.30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சாலை விரிவாக்கத்தை தடுக்க முடியாது என்றும், சாலையை விரிவு படுத்தவில்லை என்றால் எப்படி கார் ஓடும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவையில் பதிலுரையின் போது பேசிய அமைச்சர், சாலை என்று சொன்னால் பசுமை தேவை என்றார். விரிவாக்கத்தின் போது, ஒரு மரத்தை வெட்டினால் பத்து மரத்தை வைக்க வேண்டும் என முதலமைச்சர் ஆணையிட்டுள்ளதாக கூறினார்.
  • ஐபிஎல் டி20 தொடரில் இன்று லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. ஹைதராபாத்தில் மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன. இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கும் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்