7 நிமிடத்தில் 20 செய்திகள் | தந்தி காலை செய்திகள் | Speed News | (01.04.2023)

Update: 2023-04-01 03:55 GMT
  • தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. சென்னையை பொறுத்தமட்டில் புறநகர் பகுதியில் உள்ள பரனூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் சுங்க கட்டணம் ரூ.10 முதல் ரூ.60 வரை உயர்ந்துள்ளது.
  • கற்கால வழிப்பறியைப் போல டிஜிட்டல் கொள்ளையில் மத்திய அரசு ஈடுபடுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பொன்னேரியில் சங்க கட்டண உயர்வு குறித்து கருத்து தெரிவித்த வாகன உரிமையாளர்கள், சுங்கச்சாவடியில் வசூலாகும் பணம் எங்கே செல்கிறது எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
  • சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 20 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சுங்கச்சாவடி இருப்பதால் கட்டணத்தை செலுத்த முடியவில்லை என வருந்தினர்.
  • நாடு முழுவதும் 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் பொது போக்குவரத்துக்கு சொந்தமான வாகனங்களின் பதிவு இன்று முதல் ரத்து செய்யப்படவுள்ளன. ராணுவம் மற்றும் காவல் துறை உள்ளிட்ட துறையினருக்கு மட்டுமே இந்த விதி பொருந்தாது என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. பழைய வாகனங்களை ரத்து செய்து புதிய வாகனங்களை வாங்கும் பட்சத்தில் சாலை வரியில் 25 சதவீதம் வரை வரி தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய அரசின் ஸ்கிராப்பிங் திட்டத்தால் அரசு பேருந்து சேவை என்பது எந்த விதத்திலும் பாதிக்காது என போக்குவரத்து துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 2 ஆயிரத்து 500 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்காது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 15 ஆண்டுகளை கடந்த ஆயிரத்து 680 பேருந்துகளின் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • கலாஷேத்ரா உதவிப் பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். முன்னாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரை கைது செய்ய தீவிரம்காட்டுகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்