தந்தி காலை செய்திகள் | Thanthi Morning News | Speed News | Thanthi Short News (10.11.2022)

Update: 2022-11-10 03:47 GMT

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை...சென்னையில் மண்ணடி உள்ளிட்ட 5 இடங்களில் அதிகாரிகள் அதிரடி

கோவையில் உக்கடம், ரத்தினபுரி உள்ளிட்ட 20 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை...கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக சென்னை மற்றும் கொச்சியில் இருந்து வந்த அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுவடைகிறது...கடலோர மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை... நாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை.

அரசாணை 115 மூலம் உருவாக்கப்பட்ட மனிதவள சீர்திருத்தக் குழுவின் ஆய்வு வரம்புகள் மாற்றியமைக்கப்படும்...தனியார் மயத்தை நோக்கி பயணிப்பதாக அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்.

தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் குறைப்பு...25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைத்து அரசு அறிவிப்பு.

ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்ந்தாலும், டீ விலை உயராதுசென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர் சங்கம் அறிவிப்பு.

ஆவின் நிறுவனம் பற்றி தவறான தகவல்களை பரப்பி, பாஜக போராட்டம் அறிவித்துள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத் தலைவர் ஆர்.ராஜேந்திரன் குற்றச்சாட்டு..எந்த வகையில் ஆவின் பால் விலை உயர்ந்துள்ளது எனவும், போராட்டத்தை பாஜக திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தல்.

மூன்று ரூபாயாக உயர்த்தப்பட்ட பால் கொள்முதல் விலை போதுமானதாக இல்லை என சேலம் மாவட்ட விவசாயிகள் வருத்தம் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் வரை உயர்த்த வேண்டுமென கோரிக்கை.

காந்திகிராம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக நாளை திண்டுக்கல் வருகிறார், பிரதமர் மோடி...மதுரை விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு.

பிரதமர் மோடி வருகையையொட்டி, கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட காந்திகிராமம்..

அம்பாத்துறையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இரண்டு ஹெலிகாப்டர்களை இறக்கி சோதனை.

கர்நாடகாவில் நாளை மைசூரு - சென்னை வந்தே பாரத் ரயில் மற்றும் பெங்களூரு விமான நிலைய புதிய முனையத்தை துவக்கி வைக்கிறார், பிரதமர் மோடி...2 நாள் சுற்றுப்பயணத்தின்போது, 4 மாநிலங்களில் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைப்பதாக தகவல்..

பெங்களூரில் உள்ள கெம்பகவுடா பன்னாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் கண்களை கவரும் வகையில் வடிவமைப்பு...தங்க நிறத்தில் மிளிரும் வகையில் விமான நிலைய வளாகம் அமைப்பு.

தமிழகத்தை சேர்ந்த மூத்த பாஜக நிர்வாகி ஒருவருக்கு ஆளுநர் பதவி வழங்க வாய்ப்பு...பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனை என தகவல்.

Tags:    

மேலும் செய்திகள்