"பயங்கரமான அதிர்வு.. எல்லாம் இருட்டாயிடுச்சு".. கோரமண்டலில் பயணித்த பயணி எமோஷனல் பேட்டி

Update: 2023-06-04 08:50 GMT

விபத்தின்போது கோரமண்டல் ரயிலில் பயங்கரமாக அதிர்வு ஏற்பட்டதாக உயிர் பிழைத்த பயணி அதிர்ச்சியுடன் கூறி உள்ளார். ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர், புவனேஸ்வரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களை தமிழக அரசின் மீட்பு பணி பொறுப்பு அதிகாரிகள், அழைத்து வந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அந்த பயணி, விபத்தின்போது என்ன நடந்ததென்றே தங்களுக்கு தெரியவில்லை எனக் கூறினார். இதனிடையே, மீட்பு பணி பொறுப்பு அதிகாரி பேபி இந்திரா, விமானம் மூலம் சென்னை வந்த 3 பேருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை எனக் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்