அண்ணன் மகளை கேலி செய்வதரை கொன்ற சித்தப்பா.. ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல் - தென்காசி கோர்ட் வளாகம் அருகே பயங்கரம்
- தென்காசி மாவட்டத்தில் நண்பனை கொலை செய்த விரக்தியில், ஜாமினில் வெளியே வந்த இளைஞரை கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சங்கரன் கோவில் அருகே தேவிப்பட்டினத்தை சேர்ந்தவர் செல்வக்குமார்.
- இவர் தனது சகோதரனின் மகளை கேலி செய்ததாக கூறி சிவக்குமார் என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
- இதில், செல்வக்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், சில நாட்கள் முன்பு செல்வக்குமார் ஜாமினில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது.
- இந்நிலையில், சிவகிரி நீதிமன்ற வளாகம் அருகே சென்று கொண்டிருந்த செல்வக்குமாரை கும்பல் ஆயுதங்களுடன் விரட்டியுள்ளது. இதில், அருகில் இருந்த தென்னந்தோப்பில் நுழைந்த செல்வக்குமாரை கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- இந்நிலையில், சிவக்குமாரை கொலை செய்த சம்பவத்தில் பழிக்குபழி வாங்கும் விதமாக அவரின் நண்பர்கள் செல்வக்குமாரை கொலைசெய்ததாக தகவல் வெளியான நிலையில், சிவக்குமாரின் நண்பர்கள் நால்வரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.