திருவிழாவிற்கு வந்த நபர் சரமாரியாக வெட்டி கொலை - முக்கிய குற்றவாளி சிறையில் - போலீசார் திணறல்
- தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, திருவிழாவில் கலந்துகொள்ள சொந்த ஊர் வந்த நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முக்கிய குற்றவாளி சிறையில் இருப்பதால், போலீசாரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கேரளாவில் இரும்புக்கடை நடத்தி வந்த மணிகண்டன் என்பவர், சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார்.
- அப்போது, அவரை கும்பல் ஒன்று வழிமறித்து, சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணைக்குப் பிறகு, கொலை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர் செல்வக்குமார் என்பதும், அவர் தற்போது சிறையில் இருப்பதும் தெரியவந்தது.
- மேலும். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய பாலமுருகன் மற்றும் பெண் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.