தனிமையில் இருந்த ஆசிரியை.. திடீர் என வந்த அலறல் சத்தம்... - மும்பையில் இருக்கும் கணவர்

Update: 2023-05-11 15:01 GMT

உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளையில், மெட்டில்டா என்ற ஆசிரியை வசித்து வந்தார். இவருடைய கணவர் ரஸ்கின்டிரோஸ் மும்பையில் உள்ள நிலையில், ஆசிரியை மெட்டில்டா மட்டும் தனியா வசித்து வந்துள்ளார். அவருடைய வீட்டில் திடீரென்று அலறல் சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தில்இருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்ததில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அப்போது, அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியை பணம், நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்