அடுத்த 48 மணி நேரத்தில் ஆரம்பம்.. சுழற்றி அடிக்கும் சூறாவளி - வானிலை ஆய்வு மையம் பரபரப்பு தகவல்

Update: 2022-11-17 02:06 GMT

வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடலில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இன்றும் நாளையும் தென்கிழக்கு வங்கக்கடல், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில் சூறாவளி காற்று வீசும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதுபோல, வரும் 19 மற்றும் 20 தேதிகளில், தமிழகத்தை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலிலும், தெற்கு ஆந்திர கடலோர பகுதியிலும் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்