தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கா? இல்லையா? - வானிலை மையம் சொல்வது என்ன? | rain

Update: 2022-11-20 02:46 GMT

தமிழகத்தில், இன்று முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த முன்னெச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கிய மிக கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. இதையடுத்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வழங்கப்பட்ட மிக கனமழை எச்சரிக்கைக்கான அறிவுரைகள் திரும்ப பெறப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்