மாண்டஸ் புயல் பாதிப்பு குறித்த, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது.
பலத்த காற்று வீசியதால், பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. இதற்கிடையே, புயல் பாதிப்பு குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
புயலால் ஏற்பட்ட சேத விவரங்கள் மற்றும் பாதிப்பு கணக்கிடப்பட்டு, நிவாரணம் வழங்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள், துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.