தொடர் மழையால் திடீர் வெள்ளப்பெருக்கு! - ஆட்சியர் தலைமையில் மீட்பு பணி தீவிரம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் அமைந்துள்ள புல்லூர் தடுப்பணையில், நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டம் வேகவதி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர பகுதியான, தாயார் குளம் குடியிருப்பு இடத்தில் வெள்ளநீர் புகுந்ததால், அப்பகுதி மக்கள் செய்வது அறியாது திகைத்து வருகின்றனர். இதனிடையே, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில், நீர் வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள, தலையணையின் பல்வேறு நீர் வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.