வடகிழக்குப் பருவமழையை தமிழ்நாடு அரசு சிறப்பாகக் கையாண்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர், நதிநீர் பங்கீடு விவகாரங்களை தமிழ்நாடு அரசு திறம்பட கையாண்டு வருகிறது என்றும்,
மேகதாது அணையை கட்டக் கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என்றும் கூறினார்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றும்,
மாண்டஸ் புயலையும், வடகிழக்கு பருவ மழையையும் அரசு சிறப்பாக கையாண்டது என்றும், பாராட்டு தெரிவித்தார்.
சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும்,
209 கிலோ மீட்டர் நீளத்துக்கு மழைநீர் வடிகால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் கூறினார்.
காவிரி டெல்டா பகுதியில் 5 புள்ளி 28 லட்சம் ஏக்கருக்கு குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டு இருப்பதாகக் கூறிய ஆளுநர்,
தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு திட்டம், அத்திக்கடவு-அவினாசி திட்டம் முடியும் தருவாயில் இருப்பதாகவும் கூறினார்.