குஜராத் தொங்கு பால விபத்து தொடர்பாக, உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க கோரிய பொது நல மனுவை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.
இதுதொடர்பான பொது நல மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, மனுதாரர் வைத்த வாதங்களையும், குஜராத் அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் வாதங்களையும் உச்சநீதிமன்றம் பதிவு செய்து கொண்டது. குஜராத் உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து பதிவு செய்த வழக்கில், இடையீட்டு மனு தாக்கல் செய்து கொள்ளவும், மனுதாரர் விஷால் திவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், இந்த விபத்து ஒரு பெருந்துயரம் என கருத்து தெரிவித்த நீதிபதி, உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், விசாரணை குழு அமைக்கக் கோரிய பொது நல மனு முடித்து வைக்கப்படுவதாகவும் கூறினார்.