சினிமாவில் நடிக்க தடை போட்ட கணவர்...நண்பர்களை ஏவி துணை நடிகை செய்த பயங்கரம் - பொள்ளாச்சியில் அதிர்ச்சி சம்பவம்
பொள்ளாச்சி அருகே நல்லி கவுண்டன் பாளையத்தை சேர்ந்த ரமேஷ் - ரம்யா தம்பதிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. சம்பவத்தன்று, ஜமீன் முத்தூர் பகுதியில் ரமேஷும் ரம்யாவும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களை வழிமறித்த மர்மநபர், ரமேஷை தாக்கியதுடன், பிலேடால் கழுத்து கைகளில் கீறி விட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதுதொடர்பாக போலீசார், ரமேஷின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பதில் வரவே, அவரது செல்போனை போலீசார் சோதனை செய்தனர். அதில், கவுண்டம்பாளையத்தை சேர்ந்த டேனியல் சந்திரசேகர் என்பவருடன் ரம்யா அடிக்கடி போனில் பேசியது தெரியவந்தது. சீரியல்களில் துணை நடிகையாக உள்ள ரம்யா, சினிமாவில் நடிக்க அவரது கணவர் ரமேஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரம்யா, கணவரை தாக்கினால், 10 லட்சம் ரூபாய்க்கு வீடு வாங்கித் தருவதாகக் கூறி, டேனியல் சந்திரசேகரிடம் கூறியுள்ளார். அதன் பேரில் இந்த தாக்குதல் நடைபெற்றது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.