- நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
- கோவை புறநகர் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
- இதே போல் வேலூரில் 100 டிகிரி ஃபாரன்ஹூட்டுக்கு மேல் வெயில் வாட்டி வதைத்துவந்த நிலையில், திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது..