தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் பெய்த மழையால், நெல் கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டன.
பாபநாசம் சுற்றுப்புறங்களில் பரவலாக மழை பெய்ததால், சம்பா அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில், மழை காரணமாக பல்வேறு இடங்களில் நெல் கொள்முதல் பணிகள் நடைபெறவில்லை.
இதனால், நெல்லை தார்ப்பாய் கொண்டு விவசாயிகள் மூடி வைத்துள்ளனர்