முள்ளி மலையில் திடீர் தீ விபத்து... அரிய வகை மரங்கள், மூலிகைகள் சாம்பல் - தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்
தென்காசி மாவட்டம் கடையம் அடுத்த ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள முள்ளிமலை பொத்தையில் கரடி, மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
மேலும் அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள், கோரைப்புற்கள் உள்ளிட்டவையும் உள்ளது.
இந்த நிலையில் இந்த இடத்தில், திடீரென தீ பிடித்தது.
தகவல் அறிந்து வந்த கடையம் வனத்துறையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீயில் அரியவகை மரங்கள், மூலிகை செடிகள், கோரைப்புற்கள் எரிந்து சாம்பலானது.
இது போன்று தீப்பிடிப்பதால் குடியிருப்பு பகுதியில் வன விலங்குகள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் வனத்துறையினர் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.