திடீரென ஏற்பட்ட மின் கசிவு... மளமள வென பற்றி எறிந்த தீ | Karnataka | Fire Accident
கர்நாடகா மாநிலம் பெங்களூரு கைகொண்டஹல்லியில் செயல்பட்டு வரும் பர்னிச்சர் கடையில், பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின் கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமானதாக, தகவல் வெளியாகியுள்ளது.