திடீர் திடீரென வீடுகளில் விரிசல் - அதிர்ச்சி காரணம் பீதியில் ஊட்டி மக்கள்

Update: 2022-08-24 07:28 GMT

கூடலூர் பகுதியில் வீடுகளில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது குறித்து மத்திய புவியியல் துறையினர் ஆய்வு செய்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில், 20 நாட்களுக்கு முன்பு வரலாறு காணாத கனமழை பெய்தது. இந்தநிலையில் 10 நாட்களுக்கு முன்னர், கூடலூரில் இருந்து உதகை செல்லும் மலைப்பாதையில் சுமார் 70 மீட்டர் நீளத்துக்கு பிளவு ஏற்பட்டது.

நடுகூடலூர் பகுதியில், சுமார் 25க்கும் மேற்பட்ட வீடுகளில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டது.

சில வீடுகள் மண்ணில் புதைந்தது.

இதனையடுத்து வீடுகளில் இருந்தவர்களை வருவாய்த்துறையினர் மீட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஆய்வு செய்த புவியியல் துறை அதிகாரிகள், இவை பெரிய நிலச்சரிவுக்கு முன்பாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் என கூறினர்.

இந்த நிலையில் மத்திய புவியியல் துறை ஆராய்ச்சியாளர்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் அவர்கள், பாதிப்புக்கான காரணம் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்தும் தமிழக அரசுக்கும், நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கும் அறிக்கை அளிக்கப்படும் என தெரிவித்தனர்.    

Tags:    

மேலும் செய்திகள்