ஸ்கூலுக்கு லேட்டா வந்த மாணவர்கள்.. ஆட்டோ ஓட்டுநராக மாறிய ஆசிரியர்..

Update: 2023-06-18 17:00 GMT

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பாஸ்மார்பெண்டா கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள 3 மலை கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர். மலை கிராம மாணவர்கள் 3 முதல் 4 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து நடந்து வருவதால், குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலையில் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து இங்கு பணியாற்றும்

கொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்த தினகரன் என்ற இடைநிலை ஆசிரியர், தனது சொந்த செலவில் ஆட்டோவை வாங்கி அதில் மாணவர்களை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு வருகிறார். ஆசிரியரின் இந்த சேவைக்கு அந்த பகுதி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்