"பட்டியலின மாணவர்கள் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும்" -தலைமை ஆசிரியை மீது மாணவர்களின் பெற்றோர் புகார்

Update: 2022-12-01 02:24 GMT

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், பட்டியலின மாணவர்களைக் கொண்டு, பள்ளிக்கூட கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தில், தலைமை ஆசிரியை மீது வன்கொடுமைத் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

பெருந்துறை துடுப்பதி பாலக்கரையில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் உள்ள கழிவறையை, பட்டியலின மாணவர்கள் சுத்தம் செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியர் கீதா உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பள்ளியில் பயிலும் 5-ம் வகுப்பை சேர்ந்த மாணவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

அந்த மாணவரிடம் விசாரித்தபோது, பட்டியலின மாணவர்கள் வைத்து, பள்ளியில் உள்ள கழிவறையையும், தண்ணீர் தொட்டியையும், பிளீச்சிங் பவுடர் ஊற்றி, தலைமை ஆசிரியர் சுத்தம் செய்ய வைத்ததாக கூறினார்.

இதனிடையே, ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதுடன், தலைமை ஆசிரியர் கீதாவையும் எச்சரித்தனர்.

இதனிடையே, தலைமை ஆசிரியர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த தலைமை ஆசிரியர் கீதா தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்