"மாணவி ஸ்ரீ மதி மரணம் தற்கொலை இல்லை, திட்டமிட்ட கொலைக்கே வாய்ப்பு" - பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

Update: 2022-08-17 12:44 GMT

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீ மதி மரணம் தற்கொலை இல்லை என்றும், திட்டமிட்ட கொலைக்கே வாய்ப்பு இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஸ்ரீமதி மரணம் தொடர்பாக சிபிஎம் சார்பிலான மனித அமைப்பின் உண்மை கண்டறியும் குழுவினரின் அறிக்கையை அவர் வெளியிட்டார். பின்னர் அவர் பேசுகையில், மாணவி மரணம் தற்கொலை இல்லை என்றும், திட்டமிட்ட கொலைக்கே வாய்ப்பு இருப்பதாகவும், பள்ளி நிர்வாகம் மூடி மறைக்கும் பணிகளை மட்டுமே செய்துள்ளது என்றார். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை முழுமையாக செயல்படவில்லை என்றும் அவர் குற்றச்சாட்டு முன்வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்