ஆசிரியர் திட்டியதால் வந்த மனஉளைச்சல் - மேலாண்மை குழு தலைவி விபரீத முடிவு

Update: 2022-12-21 04:50 GMT

மாங்காட்டில் அரசு பள்ளி ஆசிரியையை தரக்குறைவாக பேசியதால் பள்ளி மேலாண்மை குழு தலைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாங்காட்டில் 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் 40 வயதான சவுபாக்கியம் என்பவருக்கும், பள்ளி மேலாண்மை குழு தலைவியாக உள்ள பியூலா என்பவருக்கும் இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் இன்று பள்ளிக்கு சென்ற பியூலாவை, ஆசிரியர் சவுபாக்கியம் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் வீட்டிற்கு சென்ற பியூலா மன உளைச்சலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து பள்ளிக்கு சென்ற பியூலாவின் உறவினர்கள், சவுபாக்கியத்தை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் ஆசிரியர் பியூலாவை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்