முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் மாநில திட்டக்குழு கூட்டத்தில் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் குறித்து அலோசனை நடத்தப்படவுள்ளது.
முதலமைச்சர் தலைமையில் சென்னை எழிலகத்தில் இன்று காலை 10 மணிக்கு மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் மாநில திட்டகுழு துணை தலைவர் ஜெயரஞ்சன், தலைமை செயலாளர் இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். அப்போது, தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் பற்றியும் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. அதேபோல் மக்கள் நல திட்டங்களுக்கு செலவிடப்பட்ட தொகை, திட்டமிடல் உள்ளிட்டவை குறித்தும் திட்டக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.