ஹோட்டலில் கெட்டுப்போன சிக்கன்..கூலாக பதிலளித்த ஓனர்..சிக்கன் பீஸுடன் உணவு பாதுகாப்பு துறைக்கு சென்ற நபர்

Update: 2023-04-28 05:56 GMT

ஓசூரில் உள்ள ஒரு ஹோட்டலில் கெட்டுப்போன தந்தூரி சிக்கன் பரிமாறப்பட்டதால், சாப்பிட சென்றவர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் கொடுத்தனர்.

ஓசூரை சேர்ந்த நாகேந்திரா என்பவர் தனது நண்பருடன் ரிங் ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றுள்ளார். அவர்களுக்கு பரிமாறப்பட்ட தந்தூரி சிக்கனில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அதிர்ச்சியடைந்த இருவரும் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் காண்பித்துள்ளனர். ஆனால், அவர்களோ, மற்ற தந்தூரி சிக்கன் துண்டுகளை சாப்பிடுங்கள் என்று பதில் அளித்துள்ளனர். இதனால் கோபமடைந்த இருவரும், சிக்கன் துண்டுகளுடன் ஓசூர் உணவு பாதுகாப்புத்துறையை சந்தித்து புகார் அளித்தனர். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, ஹோட்டலில் பரிமாறப்பட்ட தந்தூரி சிக்கன் துண்டை, சென்னை கிண்டியில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு பகுப்பாய்வு செய்ய அனுப்பி வைத்தார். இந்த ஆய்வு முடிவுகள் வந்த பிறகு, உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்