இலங்கையில் பதற்றம் - செய்தியாளர்கள் மீது சிறப்பு அதிரடிப்படை தாக்குதல்

Update: 2022-07-10 10:03 GMT

இலங்கையில் பதற்றம் - செய்தியாளர்கள் மீது சிறப்பு அதிரடிப்படை தாக்குதல்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் தனிப்பட்ட வீட்டின் முன்பு போராட்டம் வலுத்து வருவதால், ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. ரணிலின் தனிப்பட்ட இல்லத்தை நோக்கி ஏராளமானோர் போராட்டக்கார‌ர்கள் குவிந்து வருவதால், கண்ணீர் புகைக்குண்டு வீசி சிறப்பு அதிரடிப் படையினர் தாக்குதல் நடத்தினர். அப்போது, செய்தி செகரிக்கச் சென்ற செய்தியாளர்களையும், கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த செய்தியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் ரணில் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், பாதுகாப்புப் படையும், போராட்டக்கார‌ர்களும் அமைதி காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள ரணில், வன்முறையை தவிர்த்து, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே, அப்பகுதியில் ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளதால், பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதுவரை போலீசார் நடத்திய தாக்குதலில் 64 பேர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்