150 பேர் உயிரை குடித்த ஹாலோவீன் பயங்கரம் - தேசிய துக்க நிகழ்வாக பிரகடனம்

Update: 2022-10-31 03:29 GMT

150 பேர் உயிரை குடித்த பயங்கரம் - தேசிய துக்க நிகழ்வாக பிரகடனம்

தென்கொரியாவில் ஹாலோவீன் திருவிழாவின் போது 150 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சியோலின் இட்டாவோன் மாவட்டத்தை பேரிடர் பாதிப்பு பகுதியாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தென் கொரியத் தலைநகர் சியோலின் இட்டாவோன் மாவட்டத்தில் ஹாலோவீன் திருவிழா நடந்தது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 150 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தென்கொரிய நாட்டை உலுக்கிய நிலையில், இதனை தேசிய துக்க நிகழ்வாக பிரகனபடுத்திய தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல், இட்டாவோன் மாவட்டத்தை பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்