"விடைகொடு சாமி விட்டு போகின்றேன்..." - ஓய்வை அறிவித்தார் முன்னாள் கேப்டன் டூ பிரீஸ்...
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிஹ்னன் டூ பிரீஸ் அறிவித்து உள்ளார். சுமார் 16 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விடைபெற்றுள்ள டூ பிரீஸ், தென் ஆப்பிரிக்காவிற்காக 154 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3 ஆயிரத்து 670 ரன்களும், 114 டி20 போட்டிகளில் ஆடி ஆயிரத்து 805 ரன்களும் அடித்துள்ளார். ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், குடும்பத்துடன் இனி நேரம் செலவிட இருப்பதாகவும் டூ பிரீஸ் கூறி உள்ளார்.