"நீ அல்லால் தெய்வமில்லை"... வெண்கல குரல்.. பல பட்டங்கள்.. - இசை பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் பிறந்த தினம் இன்று
1933ல் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் சீர்காழியில் பிறந்த கோவிந்த்ராஜன் பள்ளி கல்வியை சீர்காழி வாணிவிலாஸ் பள்ளியில் முடித்த பின், சென்னை தமிழ் இசை கல்லூரியில் சங்கீத வித்வான் பட்டம் பெற்றார்.
நாடகக் குழுவில் சேர்ந்து பாடத் தொடங்கிய கோவிந்தராஜன், பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்தார். பின்னர் இசைமேதை ஜி.ராமநாதன் உதவியுடன் திரைபட பாடல் களை பாடத் தொடங்கினார்.
காத்திருந்த கண்கள் படத்தில் அவர் பாடிய, ஓடம் நதியினிலே பாடல் பெரும் ஹிட்டானது
படிக்காத மேதை படத்தில் பாரதியார் பாடலை பாடி பெரும் புகழ் பெற்றார்.
தெய்வம் படத்தில் திருச்செந்தூர் முருகனை போற்றி, டி.எம்.எஸ்ஸுடன் இணைந்த அவர் பாடிய இந்த பாடல் இன்றும் பிரபலமாக உள்ளது.
காதலிக்க நேரமில்லை படத்தின் டைட்டில் சாங்கை பாடி அசத்தினார்.
பத்மஸ்ரீ, சங்கீத் நாடாக அகடமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றார். 1988 மார்ச்சில், மாரடைப்பு காரணமாக 55 வது வயதில் காலமானார்.
தமிழ் இசை வரலாற்றில் முத்திரை பதித்த பழம் பெரும் பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் பிறந்த தினம், 1933 ஜனவரி 19.