34 நிமிடத்தில் 69 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Evening News | Speed News (24.04.2023)
- 12 மணிநேர வேலை மசோதா தொடர்பாக, தொழிற்சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
- 12 மணி நேர வேலை மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, திமுக கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
- இந்த நிலையில், மசோதா குறித்து விளக்கவும், தொழிற்சங்கத்தினரின் கருத்துக்களை அறியவும் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
- சென்னை தலைமை செயலகத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு கலந்து கொண்டு கருத்துக்களை கேட்டறிகின்றனர். தமிழகத்தில் உள்ள முக்கிய தொழிற்சங்கத்தினர், இதில் பங்கேற்கின்றனர்.
- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ தொடர்பாக, ஆளுநரை தமிழக பாஜக குழுவினர் சந்தித்து, உண்மைத்தன்மையை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
- சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வி.பி. துரைசாமி, பிடிஆர் தாம் குற்றவாளி இல்லை என்று நிரூபிக்கட்டும், நாங்கள் நீதிமன்றம் சென்று அவர் குற்றவாளி என்று நிரூபிப்போம் என்றார்.
- கிரிக்கெட் மைதானத்தில் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு பிளையிங் கிஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் 32வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதியது.
- விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இடையே, அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தான் அணியின் ஜெயிஸ்வாலின் விக்கெட்டை 47 ரன்களில் விராட் கோலி தட்டித் தூக்கினார்.
- இதனால் உற்சாகமடைந்த அனுஷ்கா சர்மா ஆரவாரம் செய்த நிலையில், விராட் கோலி மைதானத்தில் இருந்தவாறு பிளையிங் கிஸ் கொடுத்து அவரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.
- மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பி கொண்டிருந்தபோது திடீரென பேருந்து தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- தீப்பிடித்த சில நொடிகளில், பெட்ரோல் பம்ப் ஊழியர்கள், பம்ப் அருகே வைக்கப்பட்டுள்ள தீயை அணைக்கும் கருவியைப் பயன்படுத்தி தீயை அணைத்து, தனியார் பேருந்தில் பயணித்த பயணிகளின் உயிரை காப்பாற்றி உள்ளனர்
- . இது தொடர்பான சிசிடிவி பதிவுகள் இணையத்தில் பரவி வருகிறது.